ஜேர்மனியிலும் பொலிஸ் இன வெறிக்கெதிராக உயரும் குரல்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்துள்ள நிலையில், ஜேர்மனியிலுள்ள சமூக ஆர்வலர்கள் பலர் இனவெறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட பொலிசார் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவேண்டும் என்று குரல் உயர்த்தத் தொடங்கியுள்ளார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் பல கருப்பினத்தவர்கள் பொலிசாரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளார்கள்.

குறிப்பாக Sierra Leone நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளரான Oury Jalloh என்பவரது எரிந்து கரிக்கட்டையான உடல் Dessauவிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் காவல் அறையில் கண்டெடுக்கப்பட்டதைச் சொல்லலாம்.

அதன் பிறகு பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட கேமரூன் நாட்டவரான புகலிடக் கோரிக்கையாளர் Achidi John, ஈராக் அகதியான Hussam Hussein என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இவை முன்பு நடந்து கவனம் ஈர்த்த விடயங்கள், ஆனால் இன்றும் தினமும் பயங்கரமான இன வெறுப்புச் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன.

ஆப்பிரிக்க சமுதாயத்திற்கு பொலிசார் எப்போதுமே பாதுகாவலாக இருந்ததே இல்லை என்கிறார் Sylvie Nantcha.

ஜேர்மனியில் ஆப்பிரிக்கர்களுக்கான அமைப்பு ஒன்றின் தலைவர் அவர். அதற்கு பதில் பொலிசார் என்பவர்களே ஆப்பிரிக்கர்களை சந்தேகிப்பதற்காகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் என்கிறார்.

ஏஞ்சலா மெர்க்கல் கட்சியைச் சேர்ந்த Sylvie Nantcha, தனது அமைப்பினர் பலர் இன ரீதியாக பாதிக்கப்பட்ட ஏராளம் கதைகளை தான் கேட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

தேவைக்கு அதிகமாகவே எங்கள் மக்கள் பொலிசாரால் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதை நாங்கள் அறிவோம் என்கிறார் அவர்.

சில நாட்களுக்கு முன்பு, எனது சக ஊழியர் ஒருவர் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அந்த ரயிலில் நூற்றுக்கணக்கானோர் இருந்தபோதிலும், பொலிசார் அவர்களையெல்லாம் தாண்டி அந்த கருப்பினத்தவரைத்தான் நிறுத்தி அவரிடம் அவரது அடையாள அட்டையை கேட்டார்கள்.

ஆனால், இந்த விடயங்களை பொலிசார் அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்துவதில்லை, ஆகவே

அவை கவனத்துக்கு வராமலே போய்விடுகின்றன என்று கூறும் Sylvie Nantcha, இது தினந்தோறும் நடக்கிறது என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்