மாயமான பிரித்தானிய சிறுமி உயிருடன் இருக்கிறாளா இல்லையா?: சிறையிலிருக்கும் குற்றவாளியை தீவிரமாக கண்காணிக்கும் பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

போர்ச்சுகல்லில் மாயமான பிரித்தானிய சிறுமி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்கிற விடயம் குற்றவாளியின் வாயிலிருந்தே வருமா என பொலிசார் அவனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

போர்ச்சுகல் நாட்டுக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்றபோது, தனது படுக்கையிலிருந்து மாயமானாள் பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன்.

13 ஆண்டுகளாக பொலிசார் குற்றவாளியை தேடிவந்த நிலையில், பிரித்தானிய பெண்மணி ஒருவரை கோரமாக வன்புணர்வு செய்ததற்காக ஜேர்மன் சிறையிலிருக்கும் Christian Brueckner (43) என்னும் ஒருவன் மீது பொலிசாரின் கவனம் திரும்பியது.

அவனது நண்பர்கள் சிலர் கொடுத்த தகவலின் பேரில் பொலிசார் Bruecknerஐ தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Brueckner ஜேர்மனியிலுள்ள பார் ஒன்றில் வேலை செய்யும்போது, மேட்லினைக் குறித்த பேச்சு வந்ததாம்.

இது நடந்தது, மேட்லின் காணாமல் போய் ஏழு ஆண்டுகள் ஆனபிறகு. Bruecknerஇன் நெருங்கிய தோழியான Lenta Johlitz (34), மேட்லின் காணாமல் போன

விடயம் குறித்து பேசியபோது கடும் கோபமடைந்த Brueckner, அந்த பேச்சை நிறுத்துங்கள் என்று கத்தியிருக்கிறான்.

’அந்த சிறுமி செத்துவிட்டாள், அது ரொம்ப நல்லது, ஒரு உடலை சீக்கிரம் காணாமல் போக செய்துவிடலாம்’ என்று கத்தினானாம் Brueckner.

இப்படி Brueckner குறித்து ஒவ்வொருவராக பொலிசாருக்கு தகவல் கொடுத்து வரும் நிலையில், Brueckner வாயிலிருந்தே உண்மை வர காத்திருக்கிறார்கள் பொலிசார். ஜேர்மனியிலுள்ள Kiel என்னுமிடத்திலுள்ள மிகுந்த பாதுகாப்புடைய சிறை ஒன்றில் இருக்கிறான் Brueckner.

சிறை விதிகள் அனுமதிப்பதால், Bruecknerஆல் தொலைக்காட்சி மற்றும் பிற செய்திகளை கேட்க படிக்க முடியும்.

ஆக, தான் இப்போது மேட்லின் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேக வளையத்திற்குள் வந்திருப்பதை அவன் அறிவான். எனவே, அவன் இந்த வழக்கு குறித்து தன்னுடன் சிறையில் இருக்கும் சக கைதிகள் யாருடனாவது ஏதாவது பேசுவானா என பொலிசார் காத்திருக்கிறார்கள். அவன் வாயிலிருந்தே உண்மை வருமா என பார்ப்பதற்காக கமெராக்களை தீவிரமாக கண்காணித்தவண்ணம் இருக்கிறார்கள் பொலிசார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்