பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கில் ஜேர்மன் இளம்பெண்ணை தேடும் பொலிசார்: யார் அந்த இளம்பெண்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன் போர்ச்சுகல் நாட்டில் மர்மமான முறையில் மாயமான வழக்கில் ஜேர்மன் இளம்பெண் ஒருவரை பொலிசார் தேடத் துவங்கியுள்ளனர்.

அந்த பெண், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் Christian Bruecknerஇன் காதலி. Nakscije Miftari என்னும் அந்த பெண் Bruecknerஐ காதலிக்கும்போது அந்த பெண்ணுக்கு வயது 17 மட்டுமே.

Brueckner அந்த பெண்ணின் மனதை மயக்கி, ஜேர்மனியில் ஒரு வீடு ஒன்றில் அவளுடன் தங்கியிருந்திருக்கிறார்.

பின்னர் 2014ஆம் ஆண்டு Nakscijeயை போர்ச்சுகல்லுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், Nakscije ஓராண்டுக்குப்பின் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மீண்டும் Nakscijeயை பின் தொடர்ந்து Brueckner ஜேர்மனிக்கு வர, காதலும் மோதலுமாக தொடர்ந்த வாழ்க்கை, ஒரு நாள் Brueckner Nakscijeயை கடுமையாக அடித்து உதைக்க, Brueckner தன்னை கொலை செய்ய முயன்றதாக Nakscije பொலிசில் புகார் செய்ய, இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகும் Brueckner Nakscijeயை தொடர்புகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இப்போது பொலிசார் Nakscijeயை தீவிரமாக தேடி வருகிறார்கள். Nakscijeக்கு Bruecknerஇன் கடந்த காலம் தெரிந்திருக்கும்.

அவருக்கு காணாமல் போன மேட்லினைக் குறித்து ஏதாவது தெரிந்திருக்கும் என்பதற்காக, அதுவும் குறிப்பாக அவர்கள் போர்ச்சுகல்லில் செலவிட்ட நாட்களில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக, உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் Nakscijeயை கைது செய்வதற்காக ஜேர்மன் அதிகாரிகள் இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

சார் தேடுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட Nakscije தலைமறைவாகிவிட்டார். அவரை எப்படியாவது பிடித்து விசாரிப்பதற்காக ஜேர்மன் பொலிசாரும் பிரித்தானிய பொலிசாரும் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்