இரயிலில் அடிபட்டு நசுங்கிய ஜேர்மானியரின் கை: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் திருமணமான நபர் காப்பீட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு தமது கையை இழந்ததுடன், மோசடி வழக்கில் சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.

ஜேர்மானியர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு தமது ஒரு கையை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அவர் காப்பீடு நிறுவனங்களை தொடர்பு கொண்டு தமக்கு ஏற்பட்ட விபத்துக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அவரது கதையை பொலிசாரோ, காப்பீடு நிறுவனங்களோ மாவட்ட நீதிமன்றமோ நம்ப மறுத்துள்ளது.

அந்த நபர் விபத்துக்கு முன்னர் மொத்தம் ஏழு மில்லியன் யூரோக்களுக்கு ஒன்பது விபத்து காப்பீடுகளை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் வேண்டுமென்றே Nordbögge ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தமது இடது கையை சிக்க வைத்து காயம் ஏற்படுத்திக் கொண்டார்.

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அவருக்கு விபத்தில் சிக்கிய கை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

மட்டுமின்றி விபத்து ஏற்பட்டதாக அவர் கூறிய கதை நம்பும்படியாக இல்லை என கூறி அவரது கோரிக்கையை காப்பீடு நிறுவனங்கள் தள்ளுபடி செய்தன.

மட்டுமின்றி அவர் மீது மோசடி புகாரும் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்த பொலிசார், உண்மையை கண்டுபிடித்தனர்.

அந்த நபர் காப்பீட்டு மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானார், இப்போது கடுமையான மோசடிக்கு முயன்றதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்