மாயமான பிரித்தானிய சிறுமி மேட்லின் உயிருடன் இருக்கலாம்: ஜேர்மன் பொலிசார் தகவல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

போர்ச்சுகல்லில் மாயமான பிரித்தானிய சிறுமி உயிருடன் இருக்கலாம் என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய தம்பதியரான கேட் மற்றும் கெரி மெக்கேன் குழந்தைகளுடன் போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகள் மேட்லின் மெக்கேனை தவறவிட்டனர்.

அவளை Christian Brueckner என்ற பாலியல் குற்றவாளி கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேட்லின் கடத்தப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.

ஜேர்மன் விசாரணை அதிகாரியான Hans Wolters முன்பு கூறும்போது, மேட்லின் கொல்லப்பட்டுவிட்டாள், ஆனால் அவளது உடல் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால், தற்போது அவர் மேட்லின் உயிருடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால், மேட்லினின் பெற்றொருக்கு தங்கள் மகள் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக ஜேர்மனியில் இத்தகைய சூழல் இருந்தால் கொலை நடந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம்.

ஆனால், மேட்லின் இறந்துவிட்டாள் என்று நான் அல்லது ஜேர்மன் பொலிசார் கூறுவது பிரித்தானியர்களை எவ்வளவு பாதிக்கிறது என்பது தெரியவரும்போது, அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

உண்மைகளின் அடிப்படையில் மேட்லின் இறந்துவிட்டாள் என்ற முடிவுக்கு தான் வராமல், முந்தைய கடத்தல் வழக்குகளின் அனுபவத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேட்லின் இறந்துவிட்டாள் என்பதற்கு இதுவரை தடயவியல் ஆதாரம் எதுவும் கிடைக்காததால், அவள் உயிருடன் இருக்கலாம் என்பதற்கு கொஞ்சம் நம்பிக்கை உள்ளது என்று கூறும் Hans, தான் மேட்லினின் பெற்றோரின் நம்பிக்கையை கெடுக்க விரும்பவில்லை என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்