பிரித்தானிய சிறுமி மேட்லினை நான் கொல்லவில்லை: ஜேர்மன் பாலியல் குற்றவாளி மறுப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி மேட்லின் மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஜேர்மன் பாலியல் குற்றவாளி, தான் அவளை கொலை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளான்.

போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் தங்கள் மகள் மேட்லின் மெக்கேனை தவறவிட்டனர் பெற்றோரான கேட் மற்றும் கெரி மெக்கேன் தம்பதியர்.

மேட்லினை கடத்தியதாக Christian Brueckner என்ற ஜேர்மன் பாலியல் குற்றவாளி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

அவன் தற்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்புணர்வு குற்றங்களுக்காக ஜேர்மனியில் சிறையிலிருக்கிறான்.

மேட்லின் வழக்கு குறித்த விடயங்கள் வெளியானதால், சிறையிலிருக்கும் சக கைதிகளால் Brueckner உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், தனக்கும் மேட்லின் வழக்குக்கும் சம்பந்தமில்லை என்று அவன் தனது சட்டத்தரணியான Friedrich Fulscherஇடம் கூறியுள்ளான்.

இதற்கிடையில், அவன் பயன்படுத்திய 30 அடி நீள கேரவன் ஒன்றின் படம் வெளியாகியுள்ளது.

தன்னால் அந்த கேரவனில் குழந்தைகளையும் போதைப்பொருட்களையும் கடத்தமுடியும் என்றும், யாரும் தன்னை பிடிக்கமுடியாது என்றும் Dieter என்பவரிடம் கூறியுள்ளான் அவன்.

அந்த கேரவனிலிருந்து சிறுமிகளின் நீச்சல் உடைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் Bjorn என்ற நண்பரிடமும், தனக்கும் மேட்லின் வழக்குக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளான் Brueckner. இதனால் மேட்லின் வழக்கு மேலும் குழப்பமடைந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்