ஜேர்மன் இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் மீண்டும் பயங்கர கொரோனா தொற்று: 600க்கும் மேலானோர் பாதிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் மீண்டும் ஒரு இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் பயங்கரமான அளவில் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையில் பணிபுரிவோரில் 983 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 657 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Gütersloh மாகாணத்திலுள்ள அந்த தொழிற்சாலை, ஜேர்மனியின் முன்னணி இறைச்சி வெட்டும் தொழிற்சாலை ஆகும்.

அங்குள்ள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 7,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், உள்ளூர் அதிகாரிகள் அந்த தொழிற்சாலையை மூடியுள்ளதோடு, அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களும் ஜூன் மாதம் 29ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்