ஜேர்மன் இறைச்சி தொழிற்சாலையில் மீண்டும் கொரோனா தொற்று: வெளியான அதிரவைக்கும் பின்னணி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் ஜேர்மன் இறைச்சி வெட்டும் தொழிற்சாலை ஒன்றில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது மக்கள் கவனத்தை அதன்பால் திருப்பியுள்ளது.

Tönnies என்னும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் சற்று அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தியிருந்தால், இந்த இரண்டாவது அலை கொரோனா பரவலைத் தவிர்த்திருக்க இயலும் என்று கூறுகிறார்கள் ஊடகவியலாளர்கள்.

Tönnies நிறுவனம், தன் நிறுவனத்தில் வேலை செய்ய நேரடியாக ஆட்களை எடுக்காமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கு ஆள் எடுக்கிறது.

அந்த ஒப்பந்ததாரர்கள் வேறு ஒப்பந்ததாரர்கள் மூலம் ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.

அவர்கள் போலந்து, ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களை வேலைக்கு வரவழைக்கிறார்கள்.

ஒப்பந்ததாரர்கள் அவர்களை தங்கள் வருமானத்துக்கு பயன்படுத்திக்கொள்வதால், இந்த பணியாளர்கள் அடிமைகள் போல், சுகாதாரமற்ற, போதுமான இட வசதி இல்லாத இடங்களில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

அத்துடன் ஏராளமான பணியாளர்கள் அருகருகே நின்று இறைச்சி வெட்டுகிறார்கள். இதுதான் இம்முறை கொரோனா பரவ காரணமாக அமைந்துள்ளது.

Tönnies உரிமையாளர் பெரும்புள்ளி என்பதால், ஒரு காலத்தில் உள்ளூர் மக்களும் அரசியல்வாதிகளும் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள்.

ஆனால், இன்று இந்த இரண்டாவது அலை கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் மக்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

மக்கள் ஆதரவு இல்லாத ஒரு நிறுவனத்துக்கு அரசியல்வாதிகள் எப்படி ஆதரவு அளிப்பார்கள்? எனவே அவர்களும் அடக்கி வாசிக்கிறார்கள். ஆக, Tönnies நிறுவனத்துக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.

அந்த நிறுவனம் தன் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தவில்லை, ஆகவேதான் இம்முறை கொரோனா மீண்டும் பரவியது என பலரும் கருதுகிறார்கள்.

ஆகவே, அரசு இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அத்துடன் இனி Tönnies போன்ற பெரிய நிறுவனங்களை ஆதரிக்காமல் சிறிய நிறுவனங்களை ஆதரிக்கவேண்டும் என அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படி செய்தால், இறைச்சி விலை சற்று அதிகரிக்கத்தான் செய்யும், ஆனாலும், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்