ஜேர்மனியில் கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுக்கும் கொரோனா!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில், அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கிறது கொரோனா!

குறிப்பாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு கொரோனா பரவும் என்பதைக் காட்டும் R எண் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தவண்ணம் உள்ளது.

ஞாயிறு இரவு, கடந்த நான்கு நாட்களின் சராசரி R எண் 2.88ஆக உயர்ந்ததாக ராபர்ட் கோச் ஆய்வகம் தெரிவித்துள்ளது. அது முந்தைய நாட்களை விட மிக அதிகமாகும்.

சனிக்கிழமை அது 1.79ஆகவும், வெள்ளிக்கிழமை 1.06ஆகவும் இருந்தது. அவ்வப்போது கூட்டம் கூட்டமாக தொற்றுக்கள் ஏற்படும்போது இந்த R எண் அதிகரிக்கும் என்கிறது ராபர்ட் கோச் ஆய்வகம்.

ஜேர்மனியில், கடந்த இரு வாரங்களில் இரண்டு இடங்களில் பெருமளவில் அதிகரித்தது பலரும் அறிந்ததே.

Güterslohவில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Magdeburgஇல், பல பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக R எண் அதிகரித்தது. பெர்லினிலுள்ள Neukölln மாகாணத்தில் மத சம்பந்தமான கூட்டம் ஒன்றில் பங்கேற்ற 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பல நோய்த்தொற்று பரவல்கள் கண்டறியப்பட்டன.

Verden மாகாணத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

ஆக, கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருந்ததாக மற்ற நாடுகள் அண்ணாந்து பார்த்த ஜேர்மனியில் இப்போது கொரோனாவை கட்டுக்குள் வைக்க அதிகாரிகள் கடும் பிரயத்தனம் எடுத்துவருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்