பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு... விடுதலை கோரும் குற்றவாளி: முடிவெடுக்க இருக்கும் உச்ச நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

போர்ச்சுகல்லில் மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் முன்கூட்டியே தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி விண்ணப்பித்திருந்தார்.

பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன் மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியான Christian Brueckner, ஜேர்மன் நகரமான Kielஇல் உள்ள சிறைச்சாலை ஒன்றில் உள்ளான்.

2011இல் போதைக்கடத்தல் குற்றம் ஒன்றிற்காக சிறையிலடைக்கப்பட்ட அவன் 2021இல் சிறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

ஆனால், தனது தண்டனைக்காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை அவன் முடித்துவிட்ட நிலையில், முன்கூட்டியே தன்னை விடுவிக்கக்கோரி விண்ணப்பித்திருந்தான் அவன்.

2007இல் ஒரு சிறுமியை கடத்திய வழக்கில் அவன் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறான்.

தற்போது அவன் மேட்லின் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிலையில், அவன் விடுவிக்கப்பட்டால் அந்த வழக்கு திசைமாறலாம்.

அவனது விடுதலை குறித்து கீழ் நீதிமன்றங்களில் ஒரு மனதாக முடிவு எட்டப்படாததையடுத்து, வழக்கு ஜேர்மனியின் உச்சநீதிமன்றத்தை அடைந்துள்ளது.

தற்போது Bruecknerஐ முன்கூட்டியே விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து ஜேர்மன் உச்சநீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்