நான் கோபமாக இருக்கிறேன்... ஜேர்மனியில் மீண்டும் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டதால் கோபத்தில் மக்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மற்ற நாடுகளெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்திய ஜேர்மனியில், இப்போது மீண்டும் ஊரடங்கு அமுல்செய்யப்பட்டுள்ள விடயம் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் கோபம் ஊரடங்கை அமுல்படுத்திய அரசு மீது அல்ல, மீண்டும் கொரோனா பரவ காரணமாக இருந்த இறைச்சி பதப்படுத்திம் தொழிற்சாலை மீது! யார் இதற்கு காரணமோ அவர்களை கேள்வி கேட்கவேண்டும், அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும் என்கிறார்கள் மக்கள்.

North Rhine-Westphaliaவிலுள்ள Gütersloh மாகாணத்தில் சுமார் 360,000 பேர் வாழ்கிறார்கள்.

அங்குள்ள Tönnies என்னும் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் 1,700க்கும் அதிகமான பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் நேற்று முன்தினம் (புதன்) முதல், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இப்போதுதான் செயல்படத் துவங்கிய நிலையில், மீண்டும் அவை மூடப்பட்டுள்ளன, மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்காகத்தான் இந்த ஊரடங்கு என உள்ளூர் சுகாதார்த்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், அது மக்களை கடும் கோபத்திலாழ்த்தியுள்ளது.

இப்போதுதான் வருவாய் வரத்துவங்கிய நிலையில், மீண்டும் கடைகளை மூடியது ஒரு பக்கம் இருக்க, கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டதும், மக்கள் விடுமுறைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்கள்.

குழந்தைகள் தங்கள் பயணப் பைகளை தயாராக வைத்துக்கொண்டு புறப்படலாம் என்று இருந்த நேரத்தில், இந்த ஊரடங்கு அவர்களையும், அதனால் அவர்களது குடும்பத்தினரையும் கடும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த கொரோனா பரவலுக்கு காரணமான Tönnies இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Clemens Tönnies இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் குரல் உயர்த்தியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்