ஜேர்மனியில் 68,000 இளம்பெண்களுக்கு இழைக்கப்படுள்ள கொடுமை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் 68,000 இளம்பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைப்பு என்னும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017இலிருந்து இந்த எண்ணிக்கை 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் 15,000 இளம்பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைப்புக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பெண்ணுறுப்புச் சிதைப்பு என்பது மிக மோசமான மனித உரிமைகள் மீறலும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் மிக கொடுமையான குற்றமுமாகும் என்று கூறியுள்ள ஜேர்மன் குடும்ப நல அமைச்சரான Franziska Giffey, அது பாதிக்கப்பட்டோருக்கு வாழ்நாள் முழுமைக்கும் நீங்காத மன மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் என்றார்.

பெண்ணுறுப்புச் சிதைப்பை சாதாரணமாக கருதும் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால்தான் இந்த 44 சதவிகித உயர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் அவர்.

இந்த கொடூர வழக்கத்திலிருந்து இளம்பெண்களைக் காப்பதை தனது இலட்சியமாக கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்