குட்டையில் சடலமாக மிதந்த இரண்டு சிறிய குழந்தைகள்: கதறிய பெற்றோர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் கிரேவன் பகுதியில் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்த குட்டையில் பிஞ்சு சிறுவர்கள் இருவர் சடலமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மரணமடைந்த சிறுவர்கள் இருவருக்கும் 2 வயது எனவும் இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

வியாழனன்று உள்ளூர் நேரப்படி சுமார் 4.15 மணியளவில் இச்சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக பொலிசாருக்கும் அவசர உதவிக் குழுவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர் மூச்சு பேச்சின்றி கிடந்த சிறுவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவரில் தற்போது இருவர் குட்டையில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளது பெற்றோரை கலங்கடித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இது விபத்து என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மூன்றாவது நபர் அந்த குட்டை அருகே வந்ததற்கான எந்த சாத்தியமும் இல்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்