பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: மறைவிடம் ஒன்றில் 8000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டுபிடித்துள்ள பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கருதப்படும் நபருக்கு சொந்தமான மறைவிடம் ஒன்றில் 8000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜேர்மன் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றில் சிறுமி தொடர்பான தகவல் ஏதேனும் இருக்கலாம் என்ற ஒரு சிறு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய சிறுமியான மேட்லின் தனது பெற்றோருடன் போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றபோது 13 ஆண்டுகளுக்கு முன் மாயமானாள்.

அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் Christian Brueckneக்கு சொந்தமான கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றை ஜேர்மன் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

வெளியாகியுள்ள வீடியோவில் காட்டப்பட்டுள்ள அந்த மறைவிடம் எங்குள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அங்கு பொலிசார் மேற்கொண்ட சோதனையில், புதைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடைத்தது.

அதற்குள் ஏராளம் ஹார்ட் டிரைவ் மற்றும் USB ஸ்டிக்குகள் இருந்துள்ளன. அவற்றில் சுமார் 8000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.

இந்த கண்டுபிடிப்பு மேட்லின் வழக்கில் குறிப்பிடத்தக்க அளவில் உதவலாம் என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

என்றாலும், அந்த படங்கள் மற்றும் வீடியோக்களின் மேட்லின் இருக்கிறாளா என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.

வழக்கை விசாரிக்கும் தலைமை அதிகாரியான Hans Christian Wolters, அது குறித்து கூற தனக்கு தற்போதைக்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்