மீண்டும் ஜேர்மனியை நோக்கி அகதிகள் படையெடுக்கலாம்: ஜேர்மன் அமைச்சர் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், வளரும் நாடுகள் சிலவற்றில் இன்னமும் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தை அடையவில்லை என்று கூறியுள்ள ஜேர்மன் வளர்ச்சித்துறை அமைச்சர், அவர்களுக்கு மேலும் அதிக நிதியுதவி தேவை என்று கூறியுள்ளார்.

அப்படி அந்த நாடுகளுக்கு போதுமான நிதியுதவி வழங்கப்படவில்லையென்றால், ஜேர்மனி மீண்டும் ஒரு அகதிகள் அலையை சந்திக்கவேண்டியிருக்கும் என்கிறார் ஜேர்மன் வளர்ச்சித்துறை அமைச்சரான Gerd Müller.

கொரோனா பரவல் காரணமாக ஏழை நாடுகளிலிருந்து மக்கள் ஜேர்மனி நோக்கி படையெடுக்கும் ஒரு சூழல் ஏற்படலாம் என்கிறார் அவர்.

உலகம் முழுவதும் இன்னமும் கொரோனா முற்றிலும் வீழ்த்தப்படவில்லை என்றால், அது பூமராங்கைப் போல ஜேர்மனியை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார் Gerd Müller.

அப்புறம், மீண்டும் அகதிகள் நம் நாட்டை நோக்கி திடும்ப, நாம் கொரோனாவை வென்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்