குற்றவாளி விடுவிக்கப்படுவாரா?: பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கில் இரண்டு நாட்களில் முக்கிய முடிவு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி போர்ச்சுகல்லில் மாயமான வழக்கை முடிவுக்கு கொண்டுவர ஜேர்மன் பொலிசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய குழந்தை மேட்லின் மெக்கேன் மாயமான வழக்கு எந்த பிடிப்பும் இல்லாமல் இழுத்துக்கொண்டே செல்லும் நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் Christian Brueckner (43) விடுவிக்கப்பட இருக்கிறான்.

சட்டத்தில் உள்ள ஒரு சலுகையை பயன்படுத்தி அவன் விடுவிக்கப்பட இருப்பதால், அவனை மீண்டும் விசாரணைக்குட்படுத்துவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

ஆகவே, Brueckner சிறையிலிருந்து விடுவிக்கப்படுவானா இல்லையா என்பதை இன்னும் இரண்டு நாட்களில் பொலிசார் அவனிடம் தெரியப்படுத்த இருக்கிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்