தேடுவதை நிறுத்துங்கள் என் மகன் தானே வெளியே வருவான்: பொலிசாரின் ஆயுதங்களுடன் மாயமான நபரின் தாய் கோரிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
614Shares

ஜேர்மனியில் பொலிசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களது ஆயுதங்களுடன் காட்டுக்குள் மறைந்த ஒருவரை பொலிசார் தேடிவருகிறார்கள்.

Yves Etienne Rausch (31) என்ற அந்த நபரை 200 பொலிசார், சிறப்புப் படையினர், ஹெலிகொப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், அப்பகுதியிலிருந்து பொலிஸ் படை முழுவதையும் அகற்றுங்கள், என் மகன் தானே காட்டிலிருந்து வெளியே வருவான் என்று கூறியுள்ளார் Rauschஇன் தாயார்.

அவன் காடுகளில் வாழ்வதை விரும்புபவன், ஃப்ரீயாக இருப்பதற்காக இயற்கையுடன் இயைந்து வாழச் சென்றுள்ளான் அவன் என்கிறார் Rauschஇன் தாயார்.

ஆனால், ஏற்கனவே தனது காதலியை வில் அம்பினால் தாக்கியதற்காக சிறையிலிருந்திருக்கிறார் Rausch.

இதற்கிடையில் Rausch எழுதியதாக கருதப்படும் நோட்டுப்புத்தகம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், இயற்கையுடன் இயைந்து வாழ்பவர்கள், நகரங்களில் வாழ்பவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று எழுதியுள்ளார் Rausch.

Rauschஇன் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவசர உதவி தேவைப்படும் அளவுக்கு அவரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிசார், யாரும் அவரைக் கண்டால் அவர் அருகே செல்ல முயற்சிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்