5 நாட்கள் நீண்ட போராட்டம்: கைக்கோடாரியுடன் காட்டுக்குள் பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
575Shares

ஜேர்மனியில் பொலிசாரின் துப்பாக்கிகளுடன் காட்டுக்குள் தப்பிய ஜேர்மானியர் கைக்கோடாரியுடன் 5 நாட்களுக்கு பிறகு சிக்கியுள்ளார்.

ஜேர்மனியின் ஓபனாவு பகுதியை சேர்ந்த 31 வயது யவ்ஸ் ரோஷ் என்பவரே 5 நாட்களுக்கு பின்னர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

கைக்கோடாரியுடன் புதருக்குள் மறைந்திருந்த அவரை பொலிசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று பொலிசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு தப்பி, காட்டுக்குள் மாயமான இவரை சுமார் 200 பேர் கொண்ட குழு தீவிரமாக தேடி வந்துள்ளது.

ஹெலிகொப்டர்களும் சிறப்பு மோப்ப நாய்களும், நிபுணர் குழு ஒன்றும் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஜேர்மன் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டபோது குறித்த ஜேர்மானியர் சற்று காயமடைந்தார் எனவும், கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரும் கோடரியால் சிறிது காயமடைந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான அந்த ஜேர்மானியரின் மொபைல்போனில் சிறார் தொடர்பான மூன்று ஆபாச படங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிகள் மீது அதிக நாட்டம் கொண்ட ரோஷ், ஒரு கொலைகாரன் என கருதப்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பொலிசாரிடம் இருந்து பறித்த துப்பாக்கிகளை அவரிடம் இருந்து மீட்டுள்ளதாகவும், அவர் பயன்படுத்தி வந்த வில் அம்பு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்