டிக்கெட் வாங்காமல் பயணித்த பயணி... பரிசோதகர் செய்த பயங்கர செயல்: அதிர்வுகளை ஏற்படுத்திய வீடியோ!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1338Shares

ஜேர்மனியில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணி ஒருவரை கழுத்தை நெறித்த பரிசோதகர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

ட்ராம் ஒன்றில் 28 வயது நபர் ஒருவரும் அவாது 27 வயது தோழியும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர், அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லாமல் இருந்திருக்கிறது.

ட்ராமை விட்டு இறங்குமாறு கேட்டுக்கொண்டபோது, அவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக பொலிசாரிடம் கூறியுள்ளார் டிக்கெட் பரிசோதகர். ட்ராமை விட்டு இறங்கியபின் அந்த நபருக்கும் பரிசோதகருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியிருக்கிறது.

அப்போது, அந்த பரிசோதகர் அந்த இளைஞரை கீழே தள்ளி, அவரது கழுத்தை நெறித்திருக்கிறார்.

அருகில் நின்ற மக்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த இளைஞரின் கழுத்தை நெறித்துள்ளார் அந்த டிக்கெட் பரிசோதகர்.

இந்த சம்பவத்தை ஜேர்மன் பத்திரிகையான ‘Kreuzer’இன் ஊழியர்கள் கண்ணால் கண்டுள்ளார்கள்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்லைன் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

தகவலறிந்து வந்த பொலிசார் தாக்குதல், டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றியது மற்றும் டிக்கெட் கொடுக்கும் கருவியை திருடியது என பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்கள்.

அந்த வீடியோவும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையில், அந்த டிக்கெட் பரிசோதகர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

எங்களைப் பொருத்தவரை அந்த வீடியோவில் காணப்படுவதுபோன்ற அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்று போக்குவரத்துத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்