ஜேர்மன் மாகாணமொன்றில் சர்ச்சையை உருவாக்கியுள்ள தடை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் மாகாணமொன்றில் பள்ளி மாணவிகள் பர்தா அணிய தடை விதிக்கப்பட உள்ளதையடுத்து சர்ச்சை உருவாகியுள்ளது.

ஜேர்மன் மாகாணமான Baden-Württembergஇல் பள்ளி மாணவிகள் முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிய தடை விதிக்கப்பட உள்ளது.

பர்தா என்பது சுதந்திர சமூகத்தில் அணியக்கூடிய உடை அல்ல என மாகாண பிரதமரான Winfried Kretschmann தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பர்தா தடை ஜேர்மனியில் கடுமையான விவாதப்பொருளாகியுள்ள நிலையில், Hamburg நகரில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் நீக்கிவிட்டது.

இந்நிலையில் Baden-Württemberg நகர கவுன்சில் மாணவிகள் பர்தா அணிவதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

ஆசிரியைகளுக்கு ஏற்கனவே பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் கட்சிகளுக்குள் மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களில் சிலர் பர்தா தடையை ஆதரிக்க, மற்றவர்கள் எதிர்க்கிறார்கள்.

பக்கத்து நாடுகளான நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஆஸ்திரியாவில் ஏற்கனவே முகத்தை மறைக்கும் வகையிலான பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்