இளம்பெண்ணின் பானத்தில் போதைப்பொருளை கலந்த இளைஞர்கள்: பின்னர் நடந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் இளம்பெண்ணின் மதுபானத்தில் போதைப்பொருளை கலந்த இளைஞர்கள் சிலர், அவளை இரண்டு மணி நேரமாக சீரழித்துள்ளனர்.

நடன விடுதி ஒன்றிற்கு அருகே உள்ள புதர் ஒன்றிற்கு அந்த 18 வயது இளம்பெண்ணை அழைத்துச் சென்ற அந்த இளைஞர்கள், மாறி மாறி அவளை வன்கொடுமை செய்துள்ளனர்.

மதுபானம் மற்றும் போதைப்பொருளின் மயக்கத்தில் இருந்த அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை தடுக்கக்கூட இயலாத நிலைமையில் இருந்துள்ளார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்றத்துக்கு வந்த இந்த வழக்கு இழுத்துக்கொண்டே வந்துள்ளது.

அந்த பெண் விரும்பியே தங்களுடன் வந்ததாக அந்த இளைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

11 இளைஞர்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளிக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற ஏழு பேருக்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பேருக்கு நான்கு மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடனே அந்த தண்டனையை அனுபவிக்கவேண்டியதில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவத் தவறியதற்காக அவர்களுக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மற்றொருவர் இந்த குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்று கூறி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடும் செயலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மட்டுமே ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர், மீதமுள்ளவர்களில் 8 பேர் சிரிய அகதிகள் ஆவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்