பிரித்தானிய சிறுமி மாயமாகும் முன் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ: மும்முரமடையும் வழக்கு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
479Shares

போர்ச்சுகல்லில் மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அவள் காணாமல் போகும் முன் கடைசியாக எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன் பெற்றோருடன் போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றபோது மாயமானது அனைவரும் அறிந்ததே.

வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் Christian Brueckner வேறொரு குற்றம் தொடர்பில் சிறையிலிருக்கும் நிலையில், அவன் ஜேர்மனியில் தன் கேரவனுடன் தங்கியிருந்த இடம் ஒன்றை பிரம்மாண்ட கருவிகளுடன் தோண்டத்துவங்கியுள்ளனர் ஜேர்மன் பொலிசார்.

பத்திரிகையாளர்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படாத நிலையில், மரங்களினூடே அவர்கள் எடுத்துள்ள படங்கள், பொலிசார் ஆழமாக குழி தோண்டி எடுத்துள்ள பொருட்கள் சிலவற்றை பிளாஸ்டிக் கவர்களில் போடுவது தெரியவந்துள்ளது.

ஆனால், அவை என்ன ஆதாரங்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதற்கிடையில், சிறையிலிருந்து முன்கூட்டியே வெளியே வர திட்டமிட்டிருந்த Brueckner, வழக்கு இழுத்துக்கொண்டே செல்வதால், முன் கூட்டியே விடுதலை ஆகும் திட்டத்தையே கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கில் முதன்முறையாக, மேட்லின் காணாமல் போவதற்கு முன் கடைசியாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் சிறுவயது முதல் மேட்லின் பெற்றோருடன் இருக்கும் காட்சிகளுடன், காணாமல் போன அன்று அவள் அணிந்திருந்த பிங்க் நிற உடையுடன் விமான படிக்கட்டுகளில் அவள் ஏறும் காட்சியையும் காண முடிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்