சூடு பிடிக்கும் பிரித்தானிய சிறுமி வழக்கு: பக்கத்துவீட்டுக்காரர் அளித்துள்ள புதிய தகவல்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
533Shares

போர்ச்சுகல்லில் மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன் போர்ச்சுகல்லில் மாயமான அதே 2007ஆம் ஆண்டு, குற்றவாளியாக கருதப்படும் Christian Brueckner, ஜேர்மனியில் தன் பக்கத்து வீட்டில் வசித்ததாக பக்கத்து வீட்டில் வசிக்கும் Wolfgang Kossack (73) என்பவர் தெரிவித்துள்ளார்.

செய்தியில் அவனது முகத்தை பார்த்தபிறகுதான் எனக்கு நினைவு வந்தது என்று கூறும்

Kossack, 2007இல்தான் Brueckner அங்கு வந்ததாகவும், ஒரு வருடத்துக்குள் அவன் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில்தான் தற்போது சுமார் 100 ஜேர்மன் பொலிசார் பெரிய இயந்திரங்களுடன் பள்ளங்கள் தோண்டி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் Bruecknerஇன் நண்பர் ஒருவர், தனக்கு மதுபான போத்தல்கள் சேமித்து வைக்கும் ஒரு கிடங்கு இருப்பதாக Brueckner கூறியதாக தெரிவித்திருந்தார்.

இப்போது Bruecknerஇன் பக்கத்து வீட்டுக்காரர் உண்மையிலேயே Brueckner தான் தங்கியிருந்த தோட்டத்தில் ஒரு ஷெட்டும் ஒரு மதுபான கிடங்கும் இருப்பதைக் கண்டுள்ளதால் வழக்கு சூடு பிடித்துள்ளது.

தான் சிறிது காலத்தில் தெற்கு ஐரோப்பாவுக்கு சென்று வாழ விரும்புவதால், ஜேர்மனியில் தான் தங்கியிருக்கும் இடத்தை உள்ளூர் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை என்றும் Brueckner கூறியுள்ளான்.

2008ஆம் ஆண்டு Brueckner இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள Kossack, ஒரு நாள் திடீரென மாயமான Bruecknerஐ அதற்குப்பின் தான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

சில நேரங்களில் அவனுடன் ஒரு பெண் இருப்பாள், அவள் அவனது காதலி என்று நினைக்கிறேன் என்று கூறும் Kossack, அவனுக்கு இரண்டு நாய்கள் இருந்ததாகவும், அவன் ஒரு கேரவன் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே Brueckner வெளியாகியுள்ள விவரங்களும், Kossackகூறியுள்ள விவரங்களும் முற்றிலும் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

மேட்லினுடைய பெற்றோருக்காக வருந்துகிறேன் என்று கூறும் Kossack, அவர்களது மகளுக்கு என்ன ஆயிற்று என்பது விரைவில் தெரியவரும் என நம்புகிறேன் என்று கூறுகிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்