பெல்ஜியன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த Aki என்ற பெயர் கொண்ட 9 வயது மோப்ப நாய், ஜேர்மனியின் பிராங்க்பர்ட் சர்வதேச விமான நிலையத்தில் சில பயணிகளை தடுத்து நிறுத்தியுள்ளது.
அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட பயணிகளின் பைகளில் என்ன இருந்தது தெரியுமா? பணம்...
கடந்த சில நாட்களில் நடந்த இந்த சம்பவங்களில், கிட்டத்தட்ட கால் மில்லியன் யூரோக்களைக் கண்டுபிடித்துள்ளது Aki.
ஜூன் மாத கடைசியிலிருந்து ஜூலை மாத துவக்கம் வரை Aki இப்படி 12 பயணிகளை தடுத்து நிறுத்தியுள்ளது.
அப்படி தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் கைப்பைகள், முதுகுப்பைகள், ஜாக்கெட்களின் பாக்கெட்களிலிருந்து இதுவரை 247,280 யூரோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக பணம் கொண்டு வந்து பிடிபட்ட 12 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.