ஜேர்மனியில் இடம்பெற்ற இந்த விபத்து ஐஎஸ் தீவிரவாத தாக்குதலே: வழக்கறிஞர்கள் முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி
191Shares

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இடம்பெற்ற பயங்கர நெடுஞ்சாலை விபத்துக்கள் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலின் ஒரு பகுதி என ஜேர்மன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை பெர்லின் நகரின் முக்கிய போக்குவரத்து நெடுஞ்சாலையில் நீல ஓப்பல் கார் ஒன்ற சரமாரியாக பல வாகனங்கள் மீது மோதிச்சென்றது.

பின்னர் அந்த கார் நெடுஞ்சாலையில் நின்றது, அதிலிருந்த இறங்கிய நபர் காரின் மீது பெட்டியை வைத்தார், அதில் வெடிபொருள் இருப்பதாகக் கூறினார்.

காரில் இருந்து இறங்கியபோது அந்த நபர் அல்லாஹு அக்பர் என்று கூச்சலிட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனையடுத்து, பொலிசார் அந்த நபரை கைது செய்தனர். நிபுணர்கள் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் கருவிகள் மட்டுமே கிடைத்தன. இதனையடுத்து பரபரப்பான நெடுஞ்சாலை மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் 30 வயதான ஈராக்கியர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர், அதில் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலின் ஒரு பகுதியாக பெர்லின் நெடுஞ்சாலையில் பல கார் விபத்துக்கள் ஏற்பட்டதாக ஜேர்மன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் விசாரணையின் தற்போதைய நிலவரப்படி இது ஒரு ஐ.எஸ் அமைப்பால் தூண்டப்பட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர்கள் கூறினர்.

அதே சமயம் கைது செய்யப்பட்ட ஈராக்கியர் உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான அறிகுறிகளும் இருந்தன என ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று பெர்லின் அதிகாரிகள் விசாரித்து வருவதாக ஜேர்மன் செய்தி நிறுவனம் dpa தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்