ஜேர்மனியில் தொடர் விபத்துக்களுக்குப்பின் என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது என்று சத்தமிட்ட நபர்: புகைப்படம் வெளியானது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1625Shares

ஜேர்மன் நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு, சந்தேகத்துக்குரிய பொருள் ஒன்றை எடுத்து தனது காரின் மீது வைத்து, என் கிட்ட வராதீர்கள், என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது என மிரட்டல் விடுத்தார் ஒருவர்.

அந்த நபரின் பெயர் Sarmad (30) என்று தெரியவந்துள்ளதோடு, அவனது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் தொடர்ச்சியாக ஒரு கார் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியது. அந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று, சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியது.

இந்த தொடர் விபத்துக்களில் சிக்கிய ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, இருவருக்கு பலத்த காயமும், காரில் பயணித்த மூவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

இந்த விபத்துக்களில் ஒன்றில், மோட்டார் சைக்கிள் ஒன்று, விபத்தை ஏற்படுத்தியவரின் காரின் கீழ் சிக்க, அந்த காரால் அங்கிருந்து நகரமுடியாமல் போகவே, காரிலிருந்து இறங்கிய Sarmad என்னும் அந்த நபர், காருக்குள்ளிருந்து ஒரு பெட்டியை எடுத்து காரின் கூரை மீது வைத்துவிட்டு, இது ஒரு வெடிகுண்டு, யாராவது கிட்டவந்தால், எலோரும் செத்துவிடுவீர்கள் என்று சத்தமிட்டுள்ளான்.

அப்போது அவ்வழியே சென்ற அரபி மொழி தெரிந்த போக்குவரத்து பொலிசார் ஒருவர் மெல்ல Sarmadஇடம் பேச்சுக்கொடுத்து, அவனை கைது செய்துள்ளார்.

இந்த சம்பவத்தால் நேற்று காலை வரை சாலைகள் மூடப்பட்டிருந்தன. பாக்தாதில் பிறந்த Sarmad, அகதிகள் முகாம் ஒன்றில் இருக்கும்போது தீவிரவாத கருத்துக்களை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

பெர்லினில் அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக கருதப்படும் Sarmad, ஏற்கனவே மன நல பிரச்சினைகள் மற்றும் கடந்த கால தீவிரவாத செயல்கள் தொடர்பாக பொலிசாருக்கு அறிமுகமானவன் என்று கூறப்படுகிறது.

ஆனால், 2016 வரை பின்லாந்தில் வாழ்ந்துவந்த அவன் எப்போது ஜேர்மனிக்கு வந்தான் என்பது தெரியவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்