23 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை கையும் களவுமாக பிடித்த ஜேர்மனி பொலிசார்

Report Print Basu in ஜேர்மனி
892Shares

போர்க்குற்றங்களுக்காக குரோஷியாவால் தேடப்பட்டு வந்த நபரை கைது செய்துள்ளதாக ஜேர்மனி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றங்களுக்காக குரோஷியாவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு தண்டனை பெற்ற 55 வயதான முன்னாள் யூகோஸ்லாவியன் நபரை வியாழக்கிழமை கைது செய்ததாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்தனர்.

இப்போது அமெரிக்க குடிமகனாக இருக்கும் அந்த நபர், 1993ல் குரோஷியாவில் நடந்த போரின்போது, சுய-பிரகடனப்படுத்தப்பட்ட செர்பிய க்ராஜினா குடியரசின் (ஆர்.எஸ்.கே) ராணுவத்தின் பகுதியாக இருந்தபோது, ​​ ஒரு குடிமகனைக் கொன்றுள்ளார்.

இந்த குற்றத்திற்காக 1997 ஆம் ஆண்டில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் ஒருபோதும் சிறைவாசம் அனுபவித்ததில்லை, அப்போதிருந்து நீதியிலிருந்து தப்பினார் என குறிப்பிட்டுள்ளனர். தனியுரிமை காரணங்களுக்காக ஜேர்மன் அதிகாரிகள் அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை.

இந்நிலையில் சிகாகோவிலிருந்து செர்பியன் தலைநகர் பெல்கிரேடிற்குச் செல்லும் வழியில் திங்கள்கிழமை ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் அந்த நபரை கைது செய்ததாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர், மேலும்,கைது செய்யப்பட்ட நபரை குரோஷியாவிடம் ஒப்படைக்கக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்