கழிவறைக்கு சென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்த மாணவ மாணவிகள்: ஜேர்மன் பள்ளியில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
4400Shares

ஜேர்மன் பள்ளி ஒன்றில் கழிவறைக்கு செல்வதற்காக இடைவேளை அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியே சென்ற மாணவ மாணவிகள் பலர் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். காரணம், குளவிகள்...

எப்படியோ குளவிக்கூடு ஒன்றிலிருந்து கலைந்த குளவிகள் மாணவ மாணவிகளை விரட்டி விரட்டிக் கொட்ட, 16 மாணவ மணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேற்கு ஜேர்மனியிலுள்ள Lüdenscheid என்ற நகரிலுள்ள பள்ளி ஒன்றில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் விளையாட்டு மைதானம் மூடப்பட்டது, பள்ளியில் பயிலும் 1,200 மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

ஜேர்மனியில் குளவிகளைக் கொல்பவர்களுக்கு 5,000 யூரோக்கள் முதல் 50,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம், ஜேர்மனியில் குளவிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் ஆகும். இருந்தாலும், குளவிகள் கொட்டுவதால் யாருக்காவது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படும் என்றால், அவர்களுக்கு மட்டும் குளவிகளைக் கொல்ல அனுமதியுண்டு!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்