நீங்கள் வேலையே செய்யவேண்டாம்... ஊதியம் வீடு தேடி வரும்: ஜேர்மனியில் ஒரு வித்தியாசமான திட்டம் அறிமுகம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நீங்கள் வேலையே செய்யவேண்டாம், ஆனால் உங்கள் ஊதியம் வீடு தேடிவரும்... இப்படி ஒரு திட்டம், சோதனை முறையில், ஜேர்மனியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆர்வத்தைத்தூண்டும் விதத்தில் உள்ளது அல்லவா இந்த திட்டம்! ஆம், இப்படி ஒரு திட்டத்தை My Basic Income என்ற தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 1,200 யூரோக்கள் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக ஊதியம் வழங்கப்படும். அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்...

அந்த மூன்று ஆண்டுகள் காலகட்டத்தின்போது ஒன்லைனில் கேட்கப்படும் ஏழு படிவங்கள் நிறைய உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் அவ்வளவுதான்! வாழ்வின் அன்றாடத் தேவைகளுக்காக பணம் சம்பாதித்து ஆகவேண்டும் என்ற அழுத்தம் இல்லாவிட்டால், மக்கள் அதிக கிரியேட்டிவாக சிந்திப்பார்கள், சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்பது திட்டத்தை அறிமுகம் செய்வதன் எதிர்பார்ப்பு.

இப்படி ஊதியம் பெறுபவர்கள் ஒருவேளை துணிச்சலாக சுய தொழில் ஒன்றைத் துவக்கவோ அல்லது இன்னொரு பணியில் ஈடுபடவோ முடிவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் திட்டத்தின் நிறுவனர்களுக்கு உள்ளது.

அதே நேரத்தில், இந்த திட்டத்தால் நுகர்வோர் விலைகள் எப்படி உயரும், இப்படிப்பட்ட திட்டத்திற்கு நிதி உதவி செய்வதற்காக எந்த அளவுக்கு வரி உயர்வு ஏற்படும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதற்கிடையில் இந்த திட்டத்துக்கு அரசியல்வாதிகளிடம் வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, தொழிலாளர் துறை அமைச்சரும் நிதி அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்க மட்டும் தயங்கவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்