அதையே மீண்டும் செய்வேன்... ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி அறிவிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

உலகில் அகதிகள் பிரச்சினை பெரிய பிரச்சினையாக பார்க்கப்பட்ட நேரத்தில், 2015 -16 காலகட்டத்தில், தன் நாட்டின் எல்லைகளைத் திறந்து ஒரு மில்லியன் அகதிகளை தன் நாட்டுக்குள் அனுமதித்தவர் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல். அதனால் அவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பு கொஞ்சம் நஞ்சமல்ல.

சேன்ஸலர் பதவியிலிருந்து கட்சித்தலைவர் பதவிவரை இழக்கும் சூழல் ஏற்பட்ட நிலையிலும், எனக்கு இனி கட்சித் தலைவர் பதவியும் வேண்டாம், இனி சேன்ஸலர் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என ஒதுங்கிக்கொள்ளும் வரை அவரை துரத்தியது அகதிகள் பிரச்சினை.

அதற்கு முக்கிய காரணம், புகலிடம் வழங்கப்பட்ட அகதிகள் பல்வேறு கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பங்களில் ஈடுபட்டதுதான்.

இந்நிலையில், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பத்திரிகையாளர்களின் வருடாந்திர கோடை மாநாட்டில் கலந்துகொண்ட ஏஞ்சலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு அகதிகளுக்கு எல்லையைத் திறந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் ஏஞ்சலாவிடம் கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலளித்த ஏஞ்சலா, தேவையானால் இன்னொருமுறை அதே முடிவுகளை எடுப்பேன் என்றார்.

அதாவது, இன்னொரு முறை அகதிகளை வரவேற்க தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஜேர்மன் ஆஸ்திரிய எல்லையிலோ, ஹங்கேரி ஆஸ்திரிய எல்லையிலோ மக்கள் நிற்கும்போது, அவர்கள் மனிதர்களைப்போல நடத்தப்பட வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக கூறினார் ஏஞ்சலா.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்