ஜேர்மன் ஆற்றில் குளிக்கச்சென்ற நபர்கள் கண்ட காட்சி: அதிகாரிகள் நடவடிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் ஆறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிலர் முதலை ஒன்றைக் கண்டதாக தெரிவித்துள்ளதையடுத்து, ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள Unstrut ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது முதலை ஒன்றைக் கண்டதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசாருக்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில் இயற்கையாகவே முதலைகள் கிடையாது என்பதால் அவை எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை.

ஆகவே, ஆற்றில் முதலையை தேடும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதுவரை முதலை கிடைக்காத நிலையில், Unstrut ஆற்றில் குளிக்க செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்