ஜேர்மனியில் வீடு ஒன்றில் இறந்து கிடந்த ஐந்து குழந்தைகள்... ரயில் தண்டவாளத்தில் குதித்த தாய்: அதிரவைத்த ஒரு சம்பவம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
7717Shares

ஜேர்மனியில் தன் மகனுடன் ரயிலில் சென்றுகொண்டிருந்த தாய், மகனை அவனது பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு வழியிலேயே இறங்கி ரயில் பாதையில் குதித்துள்ளார்.

Marcel (11) என்ற அந்த சிறுவன் பாட்டி வீட்டுக்கு தனியாக செல்லவும் உஷாரான அந்த பாட்டி உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

உடனே Solingen என்ற இடத்திலுள்ள அந்த வீட்டுக்கு மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிசார் கண்ட காட்சியால் அவர்களே பீதியடைந்திருக்கிறார்கள்.

அந்த வீட்டில் ஒன்றரை, இரண்டு மற்றும் மூன்று வயதுள்ள மூன்று பெண் குழந்தைகள், எட்டு வயதான லூக்கா என்னும் சிறுவன், ஆறு வயதான திமோ என்னும் சிறுவன் என மொத்தம் ஐந்து குழந்தைகள் வரிசையாக இறந்துகிடந்திருக்கிறார்கள்.

அவர்கள் ஐவருக்கும் விஷ மாத்திரைகள் கொடுக்கப்படிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் Christiane K (27) என்ற அந்த குழந்தைகளின் தாய் ரயில் தண்டவாளத்தில் குதிக்க, பரபரப்படைந்த ரயில் நிலைய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டபோது, மூத்த மகனான Marcel உடன் இருந்தானா, எதனால் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விடயங்கள் தெரியவில்லை.

விசாரிக்கும் அளவுக்கு Christianeஇன் உடல் நிலையும் இல்லை. அவரது கணவரையும் தொடர்புகொள்ள இயலவில்லை என்பதால், ஒரு குற்றச்செயல் நிகழ்ந்துள்ளது, எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற இயலாது என்று மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்