ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு வெளியே குவிக்கப்பட்ட 13,000 நாற்காலிகள்: இறுகும் பிரச்சனை

Report Print Arbin Arbin in ஜேர்மனி

கிரேக்க தீவுகளில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மூடப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜேர்மன் பாராளுமன்றத்தின் வெளியே நாற்காலிகள் குவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாற்காலியும் லெஸ்போஸ் தீவில் உள்ள மோரியா முகாமில் பயங்கரமான சூழ்நிலைகளில் சிக்கியுள்ளவர்களில் ஒருவரைக் குறிக்கிறது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, 13,000 நாற்காலிகளும் ஜேர்மனியின் நகராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணங்களை குறிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல கிரேக்க தீவுகளில் உள்ள மோசமான முகாம்களில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் பொறுப்பை ஏற்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, கடந்த வாரம் மோரியா முகாமில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்துள்ளனர். சுமார் 2,800 பேர் மட்டுமே தங்குவதற்கான முகாம்களில் தற்போது 13,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி, 6,100 பேர் மட்டும் தங்க வைக்கக் கூடிய முகாம்களில், மொத்தமாக 24,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஜேர்மன் அரசு இந்த முகாம்களில் இருந்து வெறும் 465 பேர்களை மட்டுமே காப்பாற்றியுள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்