ஜேர்மனியிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்ய சீனா தடை: வெளியான பின்னணி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
471Shares

ஜேர்மனியிலிருந்து பன்றி இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளது.

நோய் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக சீனா தரப்பில் கூறப்பட்டாலும், தங்களுக்கு ஜேர்மனி உடன்பட மறுத்தால் என்ன நடக்கும் என எச்சரிப்பதற்காகவே சீனா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையில் முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், அதில் ஜேர்மனி முக்கிய பங்கு வகிக்கிறது.

சீனாவுக்கெதிரான அமெரிக்காவின் அணுகுமுறையை வெளிப்படையாக நிராகரிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

அப்படி ஒரு பேச்சுவார்த்தைக்காக சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi பெர்லினுக்கு வந்தபோது, ஜேர்மனி அவர் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அவருக்கு அளிக்கவில்லையாம்.

எனவேதான், தங்களுக்கு ஆதரவளிக்காவிட்டால், தங்கள் நாட்டுக்கு ஜேர்மனியிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யவிடமாட்டோம் என மறைமுகமாக பயமுறுத்தி காரியத்தை சாதிக்க சீனா முயற்சி செய்கிறதாம்.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே, ஜேர்மனி சீனாவுக்கு 835 மில்லியன் யூரோக்கள் அளவுக்கு பன்றி இறைச்சி ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்