மருத்துவமனையை ஹேக் செய்த ஹேக்கர்கள்... தாமதித்த ஆம்புலன்ஸ்: ஹேக்கர்கள் மீது கொலை வழக்கு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1248Shares

ஹேக்கர்கள் மருத்துவமனை ஒன்றின் சிஸ்டத்தை ஹேக் செய்ததால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதைத் தொடர்ந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Düsseldorf பல்கலைக்கழக மருத்துவமனையின் தகவல் தொடர்பு துறை கடந்த வியாழனன்று ஹேக் செய்யப்பட்டது.

அதனால் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட வேண்டிய, கவலைக்கிடமான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த பெண் ஒருவர், வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

மிக நீண்ட தொலைவுக்கு ஆம்புலன்ஸ் பயணிக்க வேண்டியிருந்ததால், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

எனவே, Cologne அதிகாரிகள் ஹேக்கர்கள் மீது கொலை செய்ததாக சந்தேக வழக்கு தொடர்வது குறித்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்