ஜேர்மனியில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பிஞ்சு குழந்தை

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவயிடத்திலேயே மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சனிக்கிழமை மாலை நேரம் நடந்த இந்த கோர விபத்தில் சம்பவயிடத்திலேயே இரண்டு பெண்கள் உள்பட மூவர் பலியாகியுள்ளனர்.

ஒரு வயதான குழந்தை ஒன்று லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.

சம்பவத்தின்போது 28 வயதான இளைஞர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மற்றும் பயணி ஒருவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்