அகதிகளை கடத்தி வேலைக்கு அமர்த்துவதாக சந்தேகம்: இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பொலிசார் ரெய்டு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றும் பணியாளர்களின் பணிச்சூழல் தலைப்புச் செய்தியானது.

அதைத் தொடர்ந்து, துணை காண்ட்ராக்டர்கள் சட்டவிரோதமாக அகதிகளை கடத்திவந்து பணிக்கமர்த்துவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் பக்கம் அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது.

அதன்படி, சுமார் 800 அதிகாரிகள் ஜேர்மனியின் ஐந்து மாகாணங்களில் உள்ள 40 இடங்களில் இன்று காலை ரெய்டுகளில் ஈடுபட்டார்கள்.

குறிவைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மீது போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பணியாளர்களை சட்ட விரோதமாக கடத்திவந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் Gütersloh நகரில் உள்ள Tönnies இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் பயங்கரமாக கொரோனா பரவல் வெடித்துக் கிளம்பியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகினர்.

அதனால் அந்நகரம் முடக்கப்பட்டதுடன் அருகிலுள்ள மாகாணமும் முடக்கப்பட்டது. அந்த நேரத்தில், Tönnies இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர், தங்களை துணை காண்ட்ராக்டர்கள் அழைத்து வந்ததாகவும், தாங்கள் நீண்ட நேரம் பணியாற்றவும், உடல் நலமில்லாத நிலையிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்