நாளை ஜேர்மனியில் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம்: பெருங்குழப்பம் ஏற்படும் என எதிர்பார்ப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
344Shares

ஜேர்மனியில் நாளை செவ்வாயன்று போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதையடுத்து, பயணிகள் பெருங்குழப்பங்களை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

130 போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் 87,000 பணியாளர்களின் பிரதிநிதியாக விளங்கும் வர்த்தக யூனியனான Verdi, நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு, பணியாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து, வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் வேலை நிறுத்தத்துக்கு அடையாளமாக, எச்சரிக்கும் விதத்தில் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள் பணியாளர்கள்.

பல பேருந்துகள், ட்ராம்கள் மற்றும் ரயில்கள் நாளை நாடு முழுவதும் இயங்காது, தலைநகர் பெர்லினில், காலை 3 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாகவே, ஜேர்மனியின் வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு அளவில் ஊதியங்கள் வழங்கப்படுவதாக யூனியன் கருதுகிறது. ஆகவே, இந்த பாகுபாட்டைக் களைந்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது அது.

அத்துடன், கொரோனா பதற்றம் நிறைந்த இந்த காலகட்டத்தில் பணியாளர்கள் சந்தித்து வரும் அதிக அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் யூனியன் கோரியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்