இதே நிலை நீடித்தால்... கடும் எச்சரிக்கை விடுத்த சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
821Shares

ஜேர்மனியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளதற்கு சான்ஸலர் மெர்க்க்கல் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே நிலை நீடித்தால் நாள் ஒன்றிற்கு 19,200 பேர் கொரோனாவுக்கு இலக்காவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், முக்கியத்துவம் தர வேண்டியவை எவை என்பதில் தெளிவு வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் தேக்க நிலை கூடாது என குறிப்பிட்டுள்ள சான்ஸலர் மெர்க்கல், பாடசாலைகள் மற்றும் சிறார் காப்பகங்கள் திறந்து செயல்படட்டும் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜேர்மானியர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமான கால்பந்தாட்டம் தற்போதைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது முழுமையான தகவல் இல்லை எனவும், பல மாகாணா சுகாதார அமைப்புகள் தங்கள் எண்ணிக்கைகளை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் தற்போது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் அதிகரித்து வருகின்றன, கடந்த 24 மணி நேரத்திற்குள் 10,000 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்