ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டி... 900 பேர் தனிமைப்படுத்தல்: விதிகளை கடுமையாக்க கோரிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டியால் 900 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஜேர்மனியின் Bielefeld நகரில் ஒரு குடும்பத்தில் நடந்த பார்ட்டியால் ஏராளமான இளைஞர்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.

அந்த பார்ட்டியில் பெருமளவில் மாணவமாணவியர் கலந்துகொண்டதால், அப்பகுதியில் உள்ள 10 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

என்றாலும், அந்த ’super spreader’ பார்ட்டியில் மொத்தம் எத்தனை பேர் கலந்துகொண்டார்கள் என்பது சரியாக தெரியவில்லை.

திங்கட்கிழமை நிலவரப்படி, தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும் பலருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால், கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாகாண கவுன்சில் திருமணம் முதலான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுவரை விசேட நிகழ்ச்சிகளில் 150 பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

இனி, அதாவது அக்டோபர் 1 முதல், 50 பேர் அல்லது அதற்கு அதிகமானோர் கலந்துகொள்ளும் திருமணம் முதலான விசேட நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்களுக்கு முன்பே உள்ளூர் பொது ஒழுங்கு அலுவலகங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்