ஜேர்மன் தலைநகரில் பரவும் கொரோனா: கடுமையாக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுள்ளன.

அதன்படி, வெளியிடங்களில் நடத்தப்படும் பார்ட்டிகளில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கட்டிடங்களுக்குள் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு 25 பேர் வரைதான் அனுமதி. அதே நேரத்தில், ஒரு குடும்ப நிகழ்ச்சியில் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்

கலந்துகொள்ளும் பட்சத்தில், வந்தவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலகங்களுக்குச் செல்லும்போது, படிக்கட்டுகள், லிப்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவது கட்டாயம். ஆனால், அலுவலகத்தில், வேலை செய்யும் இடத்தில் மாஸ்க் அணிந்து வேலை செய்வது கட்டாயமில்லை.

பொருட்காட்சிகள், மாநாடுகள் முதலானவற்றிற்கு பொது இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதே விதிகள் பொருந்தும்.

கட்டிடங்களுக்குள் என்றால் 750 பேர், நாளை (அக்டோபர் 1) முதல் 1,000 பேர், வெளியிடங்களில் 5,000 பேர் வரை அனுமதி, ஆனால், குறைந்த பட்ச சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்