ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜேர்மனி முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஜேர்மனி

வியாழக்கிழமை அதிகாலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்வதற்கு எதிராக ஜேர்மனி விடுத்திருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.

புதிய ஒழுங்குமுறையின் கீழ் பெரும்பாலான பயணிகளுக்கு சிறிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கையுடன் மீண்டும் திறக்க மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜேர்மன் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதிக தொற்று விகிதங்கள் காரணமாக, பெல்ஜியத்தின் சில பகுதிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததுடன், வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, ஜிப்ரால்டர் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணிக்க எச்சரித்தது.

கிராண்ட் எஸ்ட் பிராந்தியத்தைத் தவிர்த்து பிரான்சுக்கான பயணம் குறித்தும் ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், எஸ்டோனியா, அயர்லாந்து, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி மற்றும் குரோஷியாவின் சில பகுதிகளுக்கு மேலும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

வடக்கு இத்தாலியில் வைரஸ் பரவிய போது, மார்ச் மாதத்தில் ஜேர்மனி உலகளாவிய பயண எச்சரிக்கையை விதித்தது, ஆனால் ஜூன் மாதத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு அதை நீக்கியது.

ஒரு வாரத்தில் 1,00,000 பேருக்கு 50 வழக்குகள் என்ற விகிதத்தில் தொற்றுநோய்கள் அதிகரித்ததை அடுத்து செப்டம்பரில் ஐரோப்பாவிற்குள் உள்ள பிராந்தியங்களுக்கான எச்சரிக்கைகளை மீண்டும் வெளியிடத் தொடங்கியது ஜேர்மனி,

எதிர்காலத்தில், இதே முறை தான் உலகின் பிற பகுதிகளுக்கும் பயன்படுத்தப்படும் என ஜேர்மனி குறிப்பிட்டுள்ளது.

வைரஸின் பாதிப்பு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக இருந்தால், பயணிகள் தனிமைப்படுத்தலுக்குச் செல்லாமல் ஜேர்மனிக்குத் திரும்ப முடியும்.

தற்போது, கட்டுப்பாடுகள் இல்லாமல் ஜேர்மனிக்குள் நுழைதல் மற்றும் வெளியேறுதல் ஐரோப்பா மற்றும் ஜார்ஜியாவின் சில பகுதிகளுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்