முகக்கவசம் வேண்டாம்! ஜேர்மனியில் எதிர்பார்க்கப்பட்ட பாரிய கூட்டம் ஆனால் நடந்தது இது தான்!

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

கொரோனா தொற்றுக்கு எதிராக முககவசம் அணிய வேண்டாம் என நடைபெற்ற இயக்கம் பாரிய கூட்டம் இல்லாததால் முக்கியத்துவமற்று முடிந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.5 கோடியை கடந்துள்ள நிலையில் பல நாடுகள் தொற்று தடுப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் மேற்கு ஜேர்மனியின் கான்ஸ்டான்ஸில் முககவசத்திற்கு எதிராக சில இயக்கங்கள் மக்களை அணிதிரட்டி முககவசம் அணிவது அவசியமற்றது என்று கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுமார் 15,000 பேருக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 1,000 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தது காவல்துறையினருக்கு பெரும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கடந்த ஆகஸ்ட்டில் பெர்லினில் தீவிர இடதுசாரி, வலதுசாரி இயக்கங்களும் நடத்திய இதே போன்ற நிகழ்வு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்களை ஈர்த்திருந்தது.

தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் ஜேர்மனி சர்வதேச அளவில் 23 வது இடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுடன் உள்ள நிலையில், சில தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.

5 அடி துரம் சமூக இடைவெளி மற்றும், முககவசம் கட்டாயமாக அணிதல் போன்றவை இதில் அடங்கும். ஆனால், முழுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளை அரசு தற்போது பின்பற்றவில்லை.

இந்நிலையில் கான்ஸ்டான்ஸில் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள், மனித-இயற்கை நல்லிணக்கத்தையும், வைரஸ்களும், பாக்டீரியாக்களும் இயற்கையின் ஒரு அங்கம்தான் என்றும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் நாஜி அடையாளத்துடன் ஒன்று கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரை ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 9,500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்