ஜேர்மனியில் கொரோனா அதிகரித்தால்... மேயர்கள் ஒப்புதல்:அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஜேர்மனி
1440Shares

ஜேர்மனியில் மேலும் கொரோனா வழக்குகள் அதிகரித்தால் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு வாரத்தில் கொரோனா வழக்குகள் எண்ணிக்கை 1,00,000 பேரில் 50 என்ற விகிதத்தை தாண்டினால் கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஜேர்மனியின் 11 பெரிய நகரங்களைச் சேர்ந்த மேயர்களும் ஒப்புக் கொண்டனர் என அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறினார்

முகக் கவசம் அணிவது குறித்த கடுமையான விதிகள், தனியார் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் மதுபானம் வாங்குவதற்கான கடுமையான விதிகள் ஆகியவை இந்த கடுமைாயன கட்டுப்பாடுகளில் அடங்கும்.

வசந்த காலத்தைப் போலவே பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மீண்டும் மூடுவதைத் தவிர்ப்பதே தனது முன்னுரிமை என்று மெர்க்கல் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதா என்பதை மறுபரிசீலனை செய்ய நானும் மேயர்களும் இரண்டு வாரங்களில் மீண்டும் சந்திப்போம்.

வைரஸுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக நிற்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம், அதை மீண்டும் செய்ய வேண்டும் என மெர்க்கல் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்