ஜேர்மன் தலைநகரில் 70 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ள கொரோனா!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் தலைநகர் பெர்லின் வரலாற்றில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன்முறையாக ஊரடங்கை அறிவிக்கவைத்துவிட்டது கொரோனா!

பொதுவாக இரவு நேரம் பிஸியாக இருக்கும் பெர்லினில், 70 ஆண்டுகளில் முதன்முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, மதுபான விடுதிகளுக்குச் செல்லும் உள்ளூர் மக்கள் முதல் ஞாயிறு விடிய விடிய பார்ட்டிக்கு செல்பவர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு புது அனுபவம்.

ஆனால், தொடர்ந்து ஜேர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இப்போதைக்கு இந்த இரவு வாழ்க்கைக்கு விடுமுறை விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

மதுபான விடுதிகள் முதல் உணவகங்கள் வரை இரவில் இயங்கும் அனைத்து தொழில்களும் இனி இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணி வரை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை இந்த சனிக்கிழமை (10.10.2020) முதல் அக்டோபர் 31 வரை அமுலில் இருக்கும். ஊரடங்கை மீறும் வர்த்தகர்களுக்கு 5,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

இது கட்டாயம் தேவை என்கிறார்கள் முதியவர்கள், அதே நேரத்தில், இதெல்லாம் தவறு, வார இறுதி என்றாலே எல்லோரும் பார்ட்டிகளுக்கு செல்லத்தான் விரும்புவார்கள்,

ஆனால், மீண்டும் பெர்லினில் கிளப்கள்தான் குறிவைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் இளைஞர்கள்.

வர்த்தகர்கள் சிலரோ, கடைகள் எல்லாம் மூடப்பட்டாயிற்று, நாம் வேலை செய்ய வேண்டாமா, குடும்பத்தை எப்படி கவனித்துக்கொள்வது என்கிறார்கள். என்ன செய்வது, அவர்களுக்கு இது புது அனுபவம் அல்லவா!

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்