ஜேர்மனி மக்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி போட தொடங்கப்படும்? சுகாதார அமைச்சர் முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனி மக்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி போட தொடங்கப்படும் என்பது குறித்து நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தகவல் தெரிவித்துள்ளார்.

Ifo பொருளாதார நிறுவனத்துடனான காணொளி மாநாட்டின் உரையாற்றி ஸ்பான், தற்போதைய நிலவரப்படி, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போட தொடங்கலாம் என்று கருதுகிறேன்.

தடுப்பூசி ஆராய்ச்சியில் தற்போது ஏராளமான மருத்துவ நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆராய்ச்சியில் அனைத்து தடுப்பூசிகளும் இறுதிகட்ட சோதனையில் வெற்றிப்பெற்றால் நமக்கு அதிக தடுப்பூசி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் ஜேர்மனியில் தடுப்பூசிகள் போட தொடங்கப்படும்ம் என்று ஸ்பான் ஏற்கனவே கடந்த மாதம் கணித்திருந்தார்.

தடுப்பூசி தன்னார்வமாக இருக்கும் என்றும், முதியவர்கள், மருத்துவ-சுகாதாரப் பணியாளர்கள் போன்ற உயர் ஆபத்துள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதன் மூலம் அதிகாரிகள் தங்கள் பணிகளை தொடங்குவார்கள் என்றும் ஜென்ஸ் ஸ்பான் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்