ஜேர்மனி அரசாங்கத்தின் முக்கிய ஊரடங்கு உத்தரவு ரத்து: நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் அரசாங்கம் விதித்த முக்கிய ஊரடங்கு உத்தரவை நகர நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஜேர்மனியில் நாளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலைமைக்கு ஏற்ப விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்களிடையே விரக்தியும் அதிகரித்து வருகிறது.

ஜேர்மனி தலைநகர் பெர்லின் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக அதிகாரிகள் நகரில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களை இரவு 11 மணிக்கு மூட உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை, பெர்லினில் உள்ள பல பார் மற்றும் உணவக உரிமையாளர்கள் கூட்டாக நகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரணையின் போது, நகரில் அதிகரித்து வரும் வழக்கு எண்ணிக்கைகளுக்கு தாங்கள் காரணம் இல்லை என்று வாதிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அரசாங்கத்தின் உத்தரவை ரத்து செய்தது.

இருப்பினும், நகரில் இரவு 11 மணிக்கு பிறகு மது விற்பனைக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்