‘நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன’ ஜேர்மனியர்களுக்கு அதிபர் ஏஞ்சசோ மெர்க்கல் முக்கிய எச்சரிக்கை

Report Print Basu in ஜேர்மனி

சமூக தொடர்புகளை கட்டுப்படுத்தவும், அவசியமில்லாத பயணத்தை தவிர்க்கவும் ஏஞ்சலா மெர்க்கெல் ஜேர்மனியர்களை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறாமல் தடுக்க நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் எண்ணப்பட்டு வருகின்றன என அதிபர் தனது வாராந்திர இணைய வீடியோவில் கூறினார்.

ஐரோப்பாவின் பெரும்பகுதியை விட ஜேர்மனியின் தொற்று வீதங்கள் குறைவாக இருந்தபோதிலும், அவை சனிக்கிழமையன்று 7,830 என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையை எட்டியுள்ளன என்று தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.

மேலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரித்து 9,767 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், பிரித்தானியாவைப் போலவே, ஜேர்மன் தலைவர்களும் இந்த வாரம் கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கட்டுப்படுத்த வலுவான புதிய நடவடிக்கைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

இதற்கிடையில், பல பிராந்தியங்களில் உள்ள நீதிமன்றங்கள், நோய்த்தொற்று அதிகமுள்ள இடங்களில் சுற்றுலா பயணிகள் ஹோட்டல் தங்குவதற்கான தடைகளை ரத்து செய்துள்ளன.

நாம் இன்னும் பலவற்றை கடந்துச் செல்ல வேண்டும். வீட்டிலோ அல்லது வெளியிலோ குறைவான நபர்களைச் சந்தியுங்கள் என நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தயவுசெய்து முற்றிலும் அவசியமில்லாத எந்தவொரு பயணத்தையும், முற்றிலும் அவசியமில்லாத ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கைவிடவும். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள் என ஏஞ்சலா மெர்க்கெல் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்