ஜேர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை முதன்முறையாக ஒரே நாளில் 10,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின் படி, புதன்கிழமை ஒரே நாளில் ஜேர்மனியில் 11,287 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதை காட்டியது.
முந்தைய நாள் அதவாது செவ்வாய்க்கிழமை 7,595 வழக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,92,049 ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை 30 அதிகரித்து 9,905 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் பெரும்பகுதியை விட ஜேர்மனியின் நோய்த்தொற்று வீதங்கள் குறைவாக இருந்தாலும், குளிரான காலநிலை தொடங்கியதிலிருந்து வழக்குகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன.
இதே நிலை தொடர்ந்தால் கடுமையான சமூக தொலைதூர விதிகள் தேவைப்படலாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
அதே சமயம் ஜேர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானுக்கு புதன்கிழமை கொரோனா வைரஸ் உறுதியானது குறிப்பிடத்தக்கது.