ஜேர்மனியில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் 2-வது ஊரடங்கைத்தவிர வேறு வழியில்லை: சுகாதாரத்துறை தலைவர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
457Shares

ஜேர்மனியில் நாளொன்றிற்கு 20,000 பேருக்கு புதிதாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், இரண்டாவது ஊரடங்கை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் நாட்டின் சுகாதாரத்துறைத் தலைவர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 11,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜேர்மன் நாட்டவரும், உலக மருத்துவ கூட்டமைப்பின் தலைவருமான Frank Ulrich Montgomery, ஜேர்மனியில் நாளொன்றிற்கு 20,000 பேருக்கு புதிதாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், இரண்டாவது ஊரடங்கை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

ராபர்ட் கோச் நிறுவனம் ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,242 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளதை உறுதி செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், எங்கிருந்து எப்படி கொரோனா பரவுகிறது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாத பட்சத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படவேண்டும் என்கிறார் Montgomery.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்